×

வரிசெலுத்துவோர் அடையாள இலக்கம் பெற வேண்டியவர்களில் சுமார் 40 லட்சம் பேர் இதுவரை அதனை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 13 பில்லியனுக்கும் அதிகமானோர் டின் இலக்கத்தை பெற்றுள்ளதாகவும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கட்டாயமாக டின் இலக்கம் பெற்றிருக்க வேண்டும். நாட்டில் சுமார் 17 மில்லியன் பேர் இந்த இலக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டில் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்த சட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு டின்னிலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல், மற்றும் புதுப்பித்தல், வணிக பதிவுகளை மேற்கொள்ள நிறுவன பங்குகளை மாற்றம் செய்தல் மற்றும் கடனட்டைகளை பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு டின்னிலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளை நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளின் படி டின்னிலக்கம் இனி ரகசிய தகவலாக கருதப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவழி தினைக்களம் மேலும் அறிவித்துள்ளது. 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115