×

தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் கையில் கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர், தனது சகோதரனைக் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டில் உள்ள கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சந்தேகநபரே பாதிக்கப்பட்ட நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.       

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115